பயணத்தின் போது டைபாய்டு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கும் உத்திகள்

2023ஆம் ஆண்டில் சுமார் 5 இலட்சம் பேர் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. இது இந்தியாவில் டைபாய்டு ஒரு பெரும் பொது சுகாதாரப் பிரச்சினையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
இன்றைய காலகட்டத்தில், கடந்த காலத்தைவிட அதிகமான இந்தியர்கள் பன்னாட்டுப் பயணங்கள் மட்டுமல்ல, உள்நாட்டுப் பயணங்களும் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டைபாய்டு நோயைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
உங்கள் அடுத்த பயணத்திற்கு முன்பும் பயணத்தின் போதும் சில எளிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறலாம்.
டைபாய்டு என்பது என்ன?
டைபாய்டு என்பது சால்மோனல்லா டைஃபி என்ற ஒரு கிருமியால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இந்த நோய் மாசு பட்ட உணவு மற்றும் நீரால் பரவக்கூடிய ஒன்று. மற்றும் இதன் மிகவும் பொதுவான முக்கிய அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி மற்றும் தீவிர வயிற்று வலி ஆகியவை அடங்கும். இந்த நோய் மோசமான சுகாதார சூழ்நிலைகளால் பரவக்கூடியது என்பதால், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இது ஒரு மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
பயணத்தின் போது டைபாய்டு பாதிப்பிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது?
டைபாய்டு நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க, நீங்கள் கீழ்காணும் மூன்று எளிய நடவடிக்கைகளை பின்பற்றலாம்:
- WASH நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள் (நீர், சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரம்)
- உங்கள் உணவு விருப்பத் தேர்வுகள் குறித்து முன்னெச்சரிக்கையோடு இருங்கள்
- பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக டைபாய்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்
1. WASH நெறிமுறைகள்
பயணத்தின் போது, உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் பொருட்டு சுகாதார வரையறைகளை கண்டிப்பாக பின்பற்றுவது மிக மிக அவசியமாகும். உங்கள் கைகளை குறிப்பாக கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு மற்றும் உணவு அருந்தும் முன்பாகவும் சோப் மற்றும் நீர் கொண்டு அடிக்கடி கழுவுங்கள் சோப் மற்றும் நீர் இல்லாத இடங்களில் 60% ஆல்கஹால் அடங்கிய கை சுத்திகரிப்பானை நீங்கள் பயன்படுத்தலாம்
2. பாதுகாப்பான உணவுத் தேர்வுகள்
- சாலட் உட்பட பச்சை அல்லது சமைக்கப்படாத உணவுப் பொருட்களை தவிருங்கள்.
- பஃபே வகை உணவுகளுக்கு பதிலாக, புதிதாக சமைக்கப்பட்ட சூடான உணவுகளைத் தேர்வுசெய்க.
- வடிகட்டாத நீரை பருகாதீர்கள் மற்றும் நீர் ஆதாரம் குறித்து உங்களுக்கு எதாவ்து சந்தேகம் இருக்குமென்றால் கொதிக்க வைக்கப்பட்ட அல்லது பாட்டில் நீரை மட்டுமே பருகுங்கள்.
- பானங்களில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் சுத்திகரிக்கப்பட்ட நீரில் தயாரிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்யுங்கள்; இல்லை என்றால் அவற்றைத் தவிருங்கள். அதன் பதிலாக, சூடான பானங்கள், சுத்தமாக தயாரிக்கப்பட்ட பழச் சாறுகள் அல்லது பேக் செய்யப்பட்ட பானங்களை பயன்படுத்துங்கள்.
- சுத்திகரிக்கப்படாத பாலும் பால் பொருட்களும், நன்றாக சமைக்கப்படாத முட்டைகளும் மிகவும் தவிர்க்க வேண்டியவை.
- வாழைப்பழம் அல்லது ஆரஞ்சு போன்ற மேல் தோல் உரிக்கக் கூடிய பழங்கள் அல்லது சுத்தமாக கழுவக்கூடிய வகையிலான பழங்களை மட்டுமே உண்ணுங்கள்.
3. டைபாய்டு நோய்க்கெதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்
டைபாய்டுக்கு எதிரான மிகச்சிறந்த தடுப்பு அரண் தடுப்பூசி மட்டுமே. நீண்ட கால நிலைத்த பாதுகாப்புக்கு டைபாய்டு கூட்டு தடுப்பூசி மருந்துகளை WHO பரிந்துரைத்துள்ளது.
தடுப்பூசி உண்மையிலேயே மிக அவசியமான ஒன்றா?
மிகவும் கவனமாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் பயணிகளுக்குக் கூட டைபாய்டு நோயால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. தடுப்பூசி, இந்த தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பரவலையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இயற்கையான தொற்று நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்காது என்பதால், டைபாய்டு நோயிலிருந்து மீண்ட நபர்களுக்குக்கூட இந்த தடுப்பூசி அவசியமானதாகும்.
முடிவுரை
டைபாய்டு நோய் என்பது தவிர்க்கப்படக் கூடிய ஒன்று. ஆனாலும் உலகளவிலும் மற்றும் இந்தியாவிலும் அது தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வருகிறது.. நீங்கள் உள்நாட்டில் பயணம் செய்பவராக இருந்தாலும் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவராக இருந்தாலும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தக் கூடும். ஒரு நல்ல சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது , சுகாதாரமான உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்றவை உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான எளிதான அதே வேளையில் மிக செயல்திறன் மிக்க வழியாகும். டைபாய்டு நோய்த் தொற்று உங்கள் பயணத்தை சீர்குலைக்க அனுமதிக்காதீர்கள் முன்கூட்டியே திட்டமிடுங்கள், முன்னெச்சரிக்கையுடன் இருங்கள், மற்றும் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி கவலையற்ற பயணத்தை அனுபவிக்குங்கள்.
மூலாதாரங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.