டைபாய்டு நோய் பாதிப்பிலிருந்து யாருக்கு பாதுகாப்பு தேவைப்படும்?
உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று நீங்கள் கருதினால் உங்கள் எண்ணம் தவறானது.

டைபாய்டு நோய் அனைவரையும் பாதிக்கும்
டைபாய்டு காய்ச்சல் என்பது ஒரு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சாத்தியக் கூறுள்ளநோயாகும் அது பாதுகாப்பற்ற தண்ணீரைப் பருகுவது , பாதுகாப்பாற்ற உணவை உண்பது அல்லது நோய்த் தோற்றுள்ள நபர் உங்கள் உணவு அல்லது பானத்தை கையாளுவது போன்றவை மூலம் பரவும்.[1]

குடும்பங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்
மாசு பட்ட நீர், சமைக்கப்படாத உணவு மற்றும் சுகாதாரமற்ற வாழுமிட சூழ்நிலைகள் மூலமாக டைபாய்டு பரவும். உணவை நன்றாக வேக வையுங்கள் மற்றும் சமைப்பதற்கு மற்றும் உணவருந்துவதற்கு முன்பாகவும் மற்றும் கழிப்பறையை பயன்படுத்திய பிறகும் கைகளை முழுமையாக கழுவுங்கள்.
நோய்த் தடுப்பு
- நல்ல சுகாதாரத்தை கடைப்பிடியுங்கள். உணவருந்துவதற்கு முன்பாகவும் மற்றும் கழிப்பறையை பயன்படுத்திய பிறகும் மற்றும் உணவை கையாள்வதற்கு முன்பாகவும் கைகளை முழுமையாக கழுவுங்கள்.
- உணவை நன்றாக வேகவைத்து சமையுங்கள் மற்றும் பாதுகாப்பாக சேமித்து வையுங்கள்.
- சுத்திகரிக்கப்பட்ட அல்லது கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரையே பருக்குங்கள்.

பள்ளிகள் மற்றும் குழந்தைகள்
லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில்களை பகிர்ந்து கொள்வது மற்றும் கைகளை கழுவாமல் இருப்பது போன்றவற்றால் டைபாய்டு பரவக்கூடும். கைகளைக் கழுவுவதை ஊக்குவியுங்கள் அணுகுவதற்கு பாதுகாப்பான தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்யுங்கள் மற்றும் பள்ளிகளில் டைபாய்டு நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துங்கள்.
நோய்த் தடுப்பு
- மாணவர்கள் மற்றும் அலுவலர்களிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து மேம்படுத்துங்கள்.
- பள்ளி உணவகங்களில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக கையாளப்படுவதை உறுதி செய்யுங்கள்.
- பருக்குவதற்கு சுத்தமான நீரை வழங்குங்கள்.

வயது வந்தோர் மற்றும் மூத்த குடிமக்கள்
வயது முதிர்ந்த மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு டைபாய்டு நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகளவில் இருக்கிறது.
நோய்த் தடுப்பு
- டைபாய்டு எதிர்ப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
- நல்ல சுகாதாரத்தை குறிப்பாக பயணங்களின் போது பின்பற்றுங்கள்.
- சாலையோர உணவங்களில் உண்ணும் போது முன்னெச்சரிக்கையோடு இருங்கள்.

பயணிகள்
கூட்டம் நிறைந்த மற்றும் நோய் ஆபத்து அதிகமுள்ள பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வது டைபாய்டு நோய் தொற்று ஆபத்தை அதிகரிக்கும்.
நோய்த் தடுப்பு
- பயணம் மேற்கொள்வதற்கு முன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
- பாதுகாப்பான அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பருகுங்கள்.
- போதிய அளவு வேகவைக்காத அல்லது பகுதி சமைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
- அடிக்கடி கைகளைக் கழுவுவது உடப்ட சுகாதார நடைமுறைகளை தீவிரமாக பராமரித்துப் பின்பற்றுங்கள்.

பணியிடங்கள் மற்றும் பணியாளர்கள்
கைகளைக் கழுவாமல் உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்து கொள்வது அத்துடன் சுகாதாரமற்ற பணியிடங்கள் போன்றவை நோய் பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
நோய்த் தடுப்பு
- கைகழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்து மேம்படுத்துங்கள்.
- சுத்தமான மற்றும் அணுகக்கூடிய ஓய்வறைகளை வழங்குங்கள்.
- அலுவலக சமையலறை மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பாக கையாளப்படுவதை ஊக்குவியுங்கள்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வது டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தையும் அதனால் விளையக்கூடிய சிக்கல்களையும் குறிப்பிடத்தக்கவகையில் குறைக்கிறது. உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அது ஒரு எளிய படி நிலையாகும்.
இன்றே உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.
மூலாதாரங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்க தவறாதீர்கள்.