சாலை ஒர உணவுகளிலிருந்து உங்களுக்கு டைபாய்டு வருமா?

டைபாய்டு காய்ச்சல் மாசு படிந்த உணவு மற்றும் நீரை உட்கொள்வதன் மூலம் பரவக்கூடிய ஒரு வகை நுண்கிருமி நோய்த் தொற்று. டைபாய்டு காய்ச்சலுக்கு மூல காரணமான சல்மோனல்லா டைஃபி (Salmonella typhi) என்ற ஒரு வகை பாக்டீரியா மனித குடல் பகுதியில் வாழும். மற்றும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் (ஒரு சில சந்தர்ப்பங்களில் நோயிலிருந்து குணமடைந்து மீண்டெழுந்த தனி நபர்களும்) அவர்கள் மலம் அல்லது சிறுநீர் வழியாக பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த கிருமிகள் மாசுபட்ட உணவு அல்லது தண்ணீர் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
டைபாய்டு நோய் எவ்வாறு பரவுகிறது?
பொதுவாக, மோசமான தனிநபர் சுகாதாரத்தை பேணிவரும் நோய்த் தொற்றுடைய நபரால் தயாரிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள் சால்மோனல்லா டைஃபி நோய்கிருமிகளால் மாசுபடுகிறது. உதாரணமாக நோய்த் தொற்றுள்ள ஒரு நபர் கழிப்பறைக்கு சென்று விட்டு கைகளைக் கழுவாமல் மற்றவர்களுக்காக உணவு அல்லது பானத்தை தயாரிக்கத் தொடங்கினால், அதன் மூலமாக உங்கள் உணவில் நோய்க் கிருமிகள் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். வேறு சில சந்தர்ப்பங்களில் குடிநீருடன் கழிவு நீர் களப்பதால் அது மாசுபடும் வாய்ப்பு இருக்கிறது.
சாலை ஒர உணவகங்களில் உண்ணுவதில் உள்ள ஆபத்துக்கள்
வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் உண்ணுவதற்கு பாதுகாப்பானவை என்றும் சாலையோர உணவுகள் ஆபத்தானவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இது முழுமையாக உண்மை இல்லை என்ற போதிலும் (டைபாய்டு வீட்டிலும் பரவக்கூடும்) பொதுவாக வீட்டில் உணவு சமைக்கப்படும்போது கண்டிப்பான உணவு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன அதே சமயம் சாலையோர உணவகங்களில் உணவு தாயாரிக்கும் போது சுகாதார வரைய்றைகள் ஓரளவு சமரசம் செய்து கொள்ளப்படும்.
சாலையோர உணவு பண்டங்கள் மாசுபடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாலையோர உணவு வியாபாரிகள் அடிக்கடி வடிகட்டப்படாத அல்லது கொதிக்க வைக்கப்படாத நீரையே பயன்படுத்துவார்கள். பாதுகாப்பான குடிநீரை அவர்கள் பயன்படுத்தினாலும் பாத்திரங்களை கழுவப் பயன்படுத்தும் நீர் பாதுகாப்பாற்றதாக இருக்கும். ஒரு சில சந்தர்ப்பங்களில் சில சாலையோர உணவகங்கள் நடைமேடைகள், அல்லது சாலையின் ஓரப்பகுதிகள் போன்ற சுகாதாரமற்ற பகுதிகளில் செயல்படுகின்றன.
அதிகளவிலான சாலையோர உணவகங்களில் உணவுப் பொருட்கள் திறந்த அலமாரிகளில் காட்சிக்கு வைக்கபபட்டிருக்கும். அது உணவின் ஈர்ப்புத் தன்மையை கூட்டுவதற்காக செய்யப்பட்டாலும், அவ்வாறு திறந்து வைத்திருப்பது டைபாய்டு கிருமிகளை சுமந்துவரக்கூடிய பூச்சிகளுக்கு அவற்றை வெளிப்படுத்தும்.
என்னைப் பாதுகாப்பாக பராமரித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?
அதிருஷ்டவசமாக ஒரு சில பாதுகாப்பாக உணவு உண்ணும் பழக்கங்கள் இருக்கின்றன சாலை ஒர உணவகங்களில் உணவு உண்ணும் போது டைபாய்டு நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாம் அவற்றை பின்பற்றி நடக்க வேண்டும்.
1. குளிர்ந்த, வெதுவெதுப்பான உணவை தவிருங்கள்
நீங்கள் உண்ணும் உணவு முறையாக சமைக்கப்பட்டு உங்களுக்கு சூடாக பரிமாறப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உணவை முன்கூட்டியே சமைக்கப்பட்டு உங்களுக்கு பரிமாறுவதற்கு முன்பு மீண்டும் சூடு செய்து வழங்கப்படும் உணவகங்களை தவிருங்கள்.
2. சமைக்கப்படாத பச்சையான பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிருங்கள்
நன்கு கழுவப்படாமல் வெட்டப்பட்டு விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கவும். இவற்றைத் தயார் செய்கையில் அவை மாசுபட்டிருக்கலாம். நீங்கள் பழங்களை உண்ண விரும்பினால் வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற மேல் தோல் உரித்து உண்ணக் கூடிய பழங்களை தேர்வு செய்யுங்கள்.
3. பகுதி சமைக்கப்பட்ட உணவை தவிருங்கள்
பச்சையான அல்லது பகுதி சமைக்கப்பட்ட முட்டை, இறைச்சி மற்றும் மீன் உணவுகள் மாசுபடும் அபாயத்தைக் கொண்டுள்ளன. உங்களுக்கு பரிமாறப்படும் எந்த ஒரு உணவும் முழுமையாக சமைக்கப்பட்டு புதிதாக தயாரிக்கப்பட்ட உணவு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. வடிகாட்டப்படாத நீரை பருக்குவதை தவிருங்கள்
டைபாய்டு கிருமிகள் நீர் மூலமாக பரவக்கூடியவை என்பதால் மாசு பட்ட நீரில் நோய்த் தொற்று ஆபத்து அதிகம். சுத்தமான நீரை பருக்குவது கட்டாயம். நீரின் தரம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், கொதிக்க வைக்கப்பட்ட அல்லது பாட்டில் நீரை மட்டுமே பருக்குங்கள். நீங்கள் உண்ணும் உணவும் வடிகட்டிய , கொதிக்கவைக்கப்பட்ட அல்லது மினரல் நீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
5. ஐஸ் கட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்களை தவிருங்கள்
ஐஸ் கட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நீரின் தரம் குறித்து நீங்கள் நிச்சயமாக இல்லையென்றால் அத்தகைய ஐஸ் கட்டிகள் அடங்கிய பானத்தை பருகாதீர்கள். அவற்றுக்கு மாற்றாக தேநீர் அல்லது காபி போன்ற சூடான பானங்கள் சிறந்தவை.
6. சுத்திகரிக்கப்படாத பால் மற்றும் பால் பொருட்களை தவிருங்கள்
சுத்திகரிக்கப்படாத பால் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்புக்கள், பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தவிருங்கள். முடிந்தால் பயன்படுத்தப்படுவது பாக்கெட் பால் (சுத்திகரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கும்) என்பதை உறுதி செய்யுங்கள்.
7. தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கருத்தில் கொள்ளுங்கள்
பொதுவாக டைபாய்டு நோய் அதிகமாக இருக்கும் இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடிவு செய்வது நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். எந்த தடுப்பூசி வகை உங்களுக்கு பொருத்த்கமானதாக இருக்கும் என்பது குறித்து உங்கள் மருத்துவரோடு கலந்தாலோசியுங்கள்.
முடிவுரை
சாலையோர உணவுகள் உண்ணுவதற்கான ஆசையை தூண்டும் என்றாலும், அதில் சில ஆபத்துக்களும் அடங்கியிருக்கிறது. டைபாய்டு நோய் மாசுபட்ட உணவு மற்றும் நீரினால் பரவக்கூடிய ஒன்று என்பதால், நாம் எங்கு சாப்பிடுகிறோம் மற்றும் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் சற்று கவனமாக இருப்பது மிகவும் முக்கியம், கைகளைக் கழுவுதல், புதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணுதல் மற்றும் வடிகட்டிய நீரை பருகுதல் போன்ற எளிய அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் மிகப்பெரும் பலனைத் தரும். உண்ணுமிடம் குறித்து எந்த ஒரு சந்தேகமும் இருந்தால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை உண்ணுவது அல்லது முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் உணவகங்களில் உணவருந்துவதை தேர்ந்தெடுப்பது நோய் ஆபத்தை குறைக்க உதவும். அத்துடன் கூடுதலாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆபத்தை குறைத்து மேலும் பாதுகாப்பாக இருக்கும். ஒரு சிறிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் டைபாய்டு மற்றும் இதர உணவு மூலமாக பரவக்கூடிய நோய்களில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கு பெரும் பங்களிக்கும்.