Typhoid Needs Attention

டைபாய்டைத் தடுக்க தடுப்பூசிகள் எவ்வாறு உதவுகின்றன?

சால்மோனெல்லா டைஃபி என்ற ஒரு நுண் கிருமியால் ஏற்படும் ஒரு பாக்டீரியா தொற்று நோயான டைபாய்டு , இந்தியாவில் கவலைக்குரிய ஒரு மிகப் பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது டைபாய்டு நோயானது அதிக காய்ச்சல், பலவீனம் மற்றும் வயிற்று வலிக்கு இட்டுச்செல்லும் மற்றும் ஒரு , சில தீர்விரமான நிலைகளில் , அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். பாரம்பரியமாக தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், நோய் நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு (AMR) சக்தி அதிகரித்து வருவது சிகிச்சை முறைகளை மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக மாற்றியுள்ளது . சுத்தம் மற்றும் சுகாதார நடைமுறைகளில் முன்னேற்றம் காண்பது நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளில் பெரும் பலனை அளிக்கும் என்ற போதிலும் தடுப்பூசிசெலுத்திக் கொள்வது நோய் பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் பயனுள்ள ஒரு வழியாக உள்ளது.

டைபாய்டு தடுப்பூசிகளின் வகைகள் என்னென்ன?

இந்தியாவில், இரண்டு வகையான டைபாய்டு நோய்த் தடுப்பூசிகள் கிடைக்கின்றன:

  • Vi கேப்சுலர் பாலிசாக்கரைடு (VI-PS) தடுப்பூசி
  • டைபாய்டு காஞ்சுகேட் தடுப்பூசி (TCV)

Vi கேப்சுலர் பாலிசாக்கரைடு (VI-PS) தடுப்பூசி

Vi-PS தடுப்பூசியில் S டைஃபி (S. Typhi) வீரியத் தடுப்பு காரணியின் சுத்திகரிக்கப்பட்ட ஆன்டிஜெனிக் அடங்கியுள்ளது. ஒரே மருந்தளவில் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி முதல் ஆண்டில் சுமார் 61% பாதுகாப்பை வழங்குகிறது, இருப்பினும் காலப்போக்கில் அதன் செயல்திறன் குறையத் தொடங்குவதால் ஒவ்வொரு மூன்று வருட கால இடைவெளிகளில் மீண்டும் தடுப்பூசி செலுத்த வேண்டியிருக்கும் . இது 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு திறன் கொண்டிருக்காது என்பதால் குழந்தைகளுக்கு இதை வழங்க முடியாது.

Vi கேப்சுலர் பாலிசாக்கரைடு காஞ்சுகேட் தடுப்பூசி (TCV)

Vi-PS தடுப்பூசியின் வரையறைகளை ஈடு செய்ய , கேரியர் புரதங்களுடன் Vi-பாலிசாக்கரைடு ஆன்டிஜென்கள் இணைக்கப்பட்டு நோயெதிர்ப்பு திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது . இந்த டைபாய்டு கான்ஜுகேட் தடுப்பூசிகள் (TCVகள்) ஆறு மாத குழந்தைகளுக்கும் 65 வயது வரையிலான பெரியவர்களுக்கும் வழங்கப்படலாம் மற்றும் நீண்டகால நோய் எதிர்ப்பு திறனைக் கொண்டுள்ளன.

இந்தியா போன்ற தொற்றுநோயால் அதிகம் உள்ள நாடுகளில் 6 முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு TCV மருந்தளவை வழங்க WHO பரிந்துரைக்கிறது. இந்திய குழந்தை மருத்துவ அகாடமி, வழக்கமான நோய்த் தடுப்பூசி அட்டவணையை 6 மாத குழந்தையிலிருந்து தொடங்கவும் அத்துடன், 9 மாத வயதிலிருந்து இணை மருந்தாக மீஸில்ஸ் தடுப்பூசிகளுடன் (MR அல்லது MMR போன்றவை) செலுத்டவும் பரிந்துரைக்கிறது. முன்னதாகவே செலுத்தப்படாமலிருந்தால் , TCV மருந்து 65 வயது வரை கொடுக்கப்படலாம்.

தடுப்பூசி ஏன் முக்கியமானது?

மேம்பட்ட சுத்தம் மற்றும் சுகாதார நடைமுறைகள் டைபாய்டு நோய் பரவலைத் தடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றபோதிலும் அதை செயல்படுத்த்வதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும். நோயுடன் தொடர்புடைய நோய்ப் பாதிப்பு மற்றும் மரண விகிதங்கள் குறிப்பாக தற்போது பரவலாகக் அதிகரித்துவரும் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்புத் திறன் காரணமாக டைபாய்டு நோய் தடுப்பூசிகள் மிக முக்கியமானவை.

நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR)

டைபாய்டு நோய்க்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் எதிர்வினையாற்றுவதில் திறனற்று இருப்பதால் அந்த நோய்க்கு சிகிச்சையளிப்பது மேலும் மேலும் கடினமாகிக் கொண்டே வருகிறது. சமீப காலமாக , விரிவான டிரக் ரெஸ்டாண்ட் (XDR) டைபாய்டு என்று அழைக்கப்படும் மேலும் வலிமையான ஸ்ட்ரைன்கள் உருவாகியுள்ளன, அதன் காரணமாக சக்தி வாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளும் செயல்திறனற்று காணப்படுகின்றன. அதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புள்ள மருந்தாக அசித்ரோமைசின் ஒன்று மட்டுமே செயல்திறன் மிக்க ஒன்றாக இருக்கிறது இருப்பினும் தெற்காசியாவில் அசித்ரோமைசின் மருந்துக்கு எதிர்ப்பு திறனை வெளிப்படுத்திய சில நிகழ்வுகள் குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது அதன் விளைவாக ஊசி மூலமாக செலுத்தப்படக்கூடிய வீரியம் மிக்க ஆன்டிமைக்ரோபியல் மருந்துகளை பயன்படுத்தாமல் டைபாய்டு நோய்க்கு சிகிச்சையளிக்க இயலாது என்ற நிலைக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

டைபாய்டு தடுப்பூசிகள் நுண்ணுயிர் எதிர்ப்பை எதிர்த்துப் போராட முடியுமா?

டைபாய்டு நோய் தொற்றை தடுப்பதே ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்புத் திறனை சமாளிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் முதன்மையான ஒன்றாகும். AMR கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த தீர்வாக டைபாய்டு கான்ஜுகேட் தடுப்பூசிகளை (TCVs) WHO பரிந்துரைக்கிறது. டைபாய்டு பாதிப்பு எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், இந்த தடுப்பூசிகள் ஆன்டிபயாடிக்ஸ் மருதளவுகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுகின்றன, அதன் விளைவாக மருந்து-எதிர்ப்பு திறன் ஸ்ட்ரைன்கள் மட்டுப்படுத்தப்படுகிறது. பொது சுகாதார மேம்பாட்டுக்கான யுக்தியாக பரவலான தடுப்பூசி பயன்பாடு பெரிய நோய்ப் பரவலை தடுக்கவும், சமூகங்களைப் பாதுகாக்கவும், ஒட்டுமொத்த பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்.

முடிவுரை

டைபாய்டு இந்தியாவில் இன்னும் குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்வது நோய்த் தொற்று மற்றும் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்புத் திறனை தடுப்பதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக இருக்கிறது. சுத்தம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்த வேண்டியது மிக முக்கியமானவை என்றாலும், ஆபத்தை அறவே நீக்க அது போதுமானதாக இருக்காது. WHO மற்றும் இந்திய குழந்தை மருத்துவ அகாடமியால் பரிந்துரைக்கப்படும் டைபாய்டு கான்ஜுகேட் தடுப்பூசிகள் (TCVகள்) நீண்டகால பாதுகாப்பை வழங்குகின்றன மற்றும் இளம் வயது குழந்தைகளுக்கும் அதை வழங்கலாம். அதிகளவிலான தடுப்பூசி பயன்பாடுகளின் மூலம் பாதுகாப்பை உறுதி செய்து, டைபாய்டு பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம் என்பதோடு ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டையும் குறைக்கலாம் மற்றும் மருந்து-எதிர்ப்பு திறன் அதிகரிப்பதை மட்டுப்படுத்தலாம்.

தொடர்புடைய வாசிப்புகள்

Frame 2055245448 (1)
டைபாய்டைத் தடுக்க தடுப்பூசிகள் எவ்வாறு உதவுகின்றன?
கட்டுரையை வாசிக்கவும்
Rectangle 61 (1)
சாலை ஒர உணவுகளிலிருந்து உங்களுக்கு டைபாய்டு வருமா?
கட்டுரையை வாசிக்கவும்
Frame 2055245448 (5)
டைபாய்டு எவ்வாறு பரவுகிறது மற்றும் அது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?
கட்டுரையை வாசிக்கவும்

மூலாதாரங்கள்

பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.

Scroll to Top
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.