எனக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பதை எப்படித் தெரிந்து கொள்வது
காத்திருக்காதீர்கள் அல்லது அனுமானிக்காதீர்கள், உடனடியாக சோதனை செய்து கொள்ளுங்கள்.

ஒரு அதி விரைவாக ஒரு டைபாய்டு நோய் கண்டறிதல் சோதனை மூலம் கடுமையான நோய்ச்சிக்கல்கள் மற்றும் மருத்துவமனை அனுமதி போன்றவற்றை தடுக்கலாம். அதிக அளவிலான காய்ச்சல், பலவீனம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் காண நேர்ந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்[1] குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான டைபாய்டு நோயாளிகள் வசிக்கும் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட பிறகு அல்லது அங்கு வசிக்க நேர்ந்த காலத்துக்குப் பிறகு, உங்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் எந்த ஒரு, தாமதமுமின்றி மருத்துவ உதவியை நாடுங்கள்.[2]
டைபாய்டு காய்ச்சலை உறுதிப்படுத்த இரத்தப் பரிசோதனைகள் மிகவும் நம்பகமானவை. மலம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அதன் குறைந்த நம்பகத்தன்மை காரணமாக பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை.[2]
தொடர்புடைய பக்கங்கள்
டைபாய்டு நோய்க்கான பல்வேறு பரிசோதனைகள் வகைகள்

உங்களுக்கு குடல் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் சந்தேகப்பட்டால் ஆரம்ப கட்டங்களில் டைபாய்டு நோய்க்கான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த கட்டத்தில், நோயாளிகள் வெளிர் நிறத்தில் , சோம்பலாக மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படலாம். தோலில், குறிப்பாக உங்கள் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சொறி அல்லது தடிப்புகள் காணப்படலாம் (இவற்றை கருமை நிற சருமத்தில் அடையாளம் காண்பது சற்று கடினமாக இருக்கலாம்). உங்கள் உடலில் காணப்படும் அறிகுறிகளின் அடிப்படையில், டைபாய்டுக்கான பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.[2]


டைபாய்டு நோய்க்கான ஆய்வக சோதனைகள் வழக்கமாக இரத்த மாதிரிகள் மூலம் செய்யப்படலாம், அரிதாக சிறுநீர், மலம் மற்றும் எலும்பு மஜ்ஜை மூலம் செய்யப்படலாம்.[3]
இரத்த கல்ச்சர்
டைபாய்டு நோய்க்கான பரிசோதனைகளில் இரத்த கல்ச்சர் சோதனை மிகவும் விரும்பத்தக்க, நம்பகமான மற்றும் வழக்கமாகப் பின்பற்றப்படும் ஒரு முறையாகும், ஆனால் அதற்கென தனிப்பட்ட வரையறைகள் உள்ளன [2] முதல் வாரத்தில் நோய் கண்டறியும் விகிதம் 90% வரை கொண்டுள்ளது, மேலும் நெகட்டிவ் முடிவை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்பு நடைமுறைகளுக்கு நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் ஐந்து நாட்கள் வரை ஆகலாம்.[4]
எலும்பு மஜ்ஜை கல்ச்சர்
எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் வாரக்கணக்கில் நீடிக்கும் காய்ச்சலுக்கான காரணத்தை ஆய்வு செய்வதற்கு எலும்பு மஜ்ஜை கல்ச்சர் சோதனை பெருமளவில் விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறது. இந்த சோதனைமூலம் நோயின் பிந்தைய கால கட்ட நிலையை கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம், ஏனெனில் இந்த சோதனை மூலம் ஆண்டிபயாடிக் சிகிச்சைக்குப் பிறகும் பாக்டீரியாவின் இருப்பைக் கண்டறிய முடியும்[4] இருப்பினும், பொதுவாக இந்த சோதனை பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை, ஏனெனில் இது உள்ளே ஊடுறுவி சென்று ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இதை மேற்கொள்வது சாத்தியமில்லை.[5] மிகக் குறைந்த அளவிலேயே இருக்கக் கூடிய மற்றும் அடையாளம் காணப்படாத மூலத்திலிருந்து வந்த அரியவகை நோய் தொற்றுக்களை ஆய்வு செய்து டைபாய்டு இல்லாதிருப்பதை உறுதி செய்ய, அதன் மாதிரிகள் கல்ச்சர் உருவாக்க அனுப்பப்படவேண்டும்.
ஸ்டூல் கல்ச்சர்
டைபாய்டு நோயை உறுதி செய்ய மலம் (ஸ்டூல்) கல்ச்சர் ஒரு நம்பத்தகுந்த பரிசோதனை அல்ல. ஏனெனில் இது குணமடைந்து வரும் நோயாளிகளுக்கு நேர்மறையான முடிவுகளைக் காட்டக்கூடும். இருப்பினும், ஒருவர் நாள்பட்ட நோய் தொற்று உள்ளவரா என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது. டைபாய்டு நோயை உறுதி செய்ய யூரின் கல்ச்சர் சோதனை ஒரு வழக்கமான சோதனை முறை அல்ல.[2]
வைடல் பரிசோதனை
இந்தியாவில், டைபாய்டு காய்ச்சலை உறுதி செய்ய வைடல் பரிசோதனை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இது டைபாய்டு பாக்டீரியாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டறிகிறது மேலும் நோயின் இரண்டாவது வாரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், வைடல் சோதனை குறைந்த உணர்திறன் மற்றும் தனித்தன்மையைக் கொண்டுள்ளது, அதாவது இது சில நேரங்களில் மலேரியா போன்ற நோய்கள் அல்லது இதர பாக்டீரியா தொற்று நோய்களை டைபாய்டு ஆக தவறான முடிவுகளை அளிக்கக் கூடும்.[4]
தொடர்புடைய பக்கங்கள்
மூலாதாரங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக் கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக் கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.