Typhoid Needs Attention

ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணர்களுக்கான நுண்ணறிவு மற்றும் பார்வைக் குறிப்புக்கள்

இந்த பார்வைக்குறிப்புப் பிரிவில் அதிகாரபூர்வமான மூலாதாரங்களிலிருந்து பெறப்பட்ட முக்கியமான டைபாய்டு ஆய்வு முடிவுகள் மற்றும் அறிக்கைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது நோய்க்குறியியல், சிகிச்சை படிமுறைகள், தடுப்பு யுக்திகள் மற்றும் தடுப்பூசி செயல்திறன் ஆகியவை குறித்து ஆதார அடிப்படையிலான தரவுகளை ஆய்வு செய்யுங்கள்.

இந்தியன் ஜெர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்

டைபாய்டு காய்ச்சல்: இந்தியாவில் அதன் கட்டுப்பாடு மற்றும் சவால்கள்.

குடல் காய்ச்சல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பாக குழந்தைகளை பாதிக்கக் கூடிய ஒரு முக்கியமான பொது சுகாதார சவாலாகும். டைபாய்டு நோயைக் கட்டுப்படுத்த நோய் கண்டறிதல், கண்காணிப்பு, தடுப்பூசி மற்றும் WASH முன்முயற்சிக்கள் அடங்கிய ஒருங்கிணைந்த யுக்திகள் தேவை.

இந்தியன் ஜெர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்

இந்தியாவில் டைபாய்டல் சால்மோனெல்லா நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த முறையான மதிப்பாய்வு

டைபாய்டு காய்ச்சலில் இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரையிலான நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) போக்குகளின் பகுப்பாய்வு. எதிர்ப்புத் திறன் கொண்ட நுண்ணுயிரிகளை எதிர்கொள்ள புதுப்பிக்கப்பட்ட சிகிச்சை வழிகாட்டுதல்கள் மற்றும் தடுப்பூசி உத்திகளின் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

சென்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன்

கிளினிக்கல் கைடன்ஸ் ஃபார் டைபாய்டு பீவர் அண்ட் பாராடைஃபாய்ட் பீவர்

டைபாய்டு குறித்த மருத்துவ அம்சங்கள் , தீவிர சிக்கல்கள், நோய் கண்டறிதல், நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான விவரங்கள் அடங்கிய ஒரு முழுமையான மேலோட்டப்பார்வை.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்

பார்டன் ஆப் டைபாய்டு அண்ட் பாராடைபாய்டு

இந்தியாவில் தீவிர கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இது குறித்த யூகங்களுக்கு சவால் விடும் வகையில், நகர்ப்புறங்களில் அதிக டைபாய்டு பாதிப்பு விகிதம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. குறியிலக்குடன் கூடிய தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கண்காணிப்பின் அவசியத்தை இந்த கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியன் அக்காடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்

IAP ஸ்டாண்டர்ட் ட்ரீட்மெண்ட் கைடுலைன்ஸ் 2022

குறிப்பிட்ட வயதினரிடையேயான அறிகுறிகளை கண்டறிவது, செரோலாஜிக்கல் சோதனைகள் மாறாக இரத்த கல்ச்சர் சோதனைக்கு முன்னுரிமை அளித்தல், அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான மருந்தளவு வழிகாட்டுதல்களுடன் நுண்ணுயிர் சிகிச்சை நடைமுறைகள் உட்பட டைபாய்டு காய்ச்சல் மேலாண்மை குறித்த ஒரு சிறு விளக்கக் குறிப்பு.

மேயோ கிளினிக்

டைபாய்டு பீவர் - டயக்னாசிஸ் & ட்ரீட்மெண்ட்

மருத்துவ மதிப்பீடு, பயண வரலாறு மற்றும் ஆய்வக சோதனைகள் வழியாக டைபாய்டு காய்ச்சல் நோய் கண்டறிவதற்கான வழிகாட்டுதல் அத்துடன் சேர்த்து பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வகையான ஆன்டிபயாட்டிக் சிகிச்சைவிவரங்கள்.

வோர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசெஷன்

சம்மரி ஆஃப் WHO ப்ரீ குவாலிஃபைட் டைபாய்த் காஞ்ஜுகெட் (TCVs)

WHO முன் தகுதி பெற்ற இரண்டு டைபாய்டு இணை தடுப்பூசிகளிடையே அவற்றின் ஒவ்வொன்றின் உட்கூறுகள், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை எடுத்துக்காட்டும் ஒப்பீடு, இரண்டில், டைப்பார்-TCV கள செயல்திறனைக் நிரூபித்துக் காட்டியுள்ளது.

BMC இன்ஃபெக்ஷியஸ் டிசீஸஸ்

அஸ்சோசியேஷன் ஆஃப் வாட்டர், சானிடேஷன், மற்றும் ஹைஜீன் வித் டைபாய்டு ஃபீவர் இன் கேஸ் கண்ட்ரோல் ஸ்டடீஸ்: ஏ சிஸ்டமேட்டிக் ரீவ்யூ அண்ட் மெட்டா அனாலிசிஸ்

மேம்படுத்தப்பட்ட நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு (WASH) நடைமுறைகள் டைபாய்டு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பளவுகளைக் குறைக்கின்றன என்பதை 27 கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் மதிப்பாய்வு உறுதிப்படுத்தியது. வள ஆதாரங்களுடனான பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு, சுகாதாரக் கல்வி மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு போன்ற தீர்வுகளை மிகக் குறைந்த செலவில் மேற்கொண்டு எளிதாக டைபாய்டு நோயைத் திறம்படத் தடுக்கலாம்.

ஓப்பன் ஃபோரம் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸஸ்

டைபாய்டு கண்ட்ரோல் இன் அன் இரா ஆஃப் மைக்ரோபியல் ரெஸிஸ்டன்ஸ்: சேலஞ்சஸ் அண்ட் அப்போர்ச்சுனிட்டீஸ்

S. டைஃபி இல் அதிகரித்து வரும் AMR, ஆன்டிபயாட்டிக்ஸ் மீது சார்ந்திருப்பதை விட நோய்த் தடுப்பில் கட்டாய கவனம் செலுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது டைபாய்டு கான்ஜுகேட் தடுப்பூசிகள் மற்றும் WASH மேம்பாடுகளுடன் நிலைத்தன்மையோடுட்னான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சாத்தியமாகும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த எதிர்ப்புச் சுழற்சியை தகர்ப்பதற்கான முக்கிய செயல்பாடாக இருக்கும்.

ஜெபீ பிரதர்ஸ்

பர்ப்பிள் புக்: கைட் புக் ஆண் இம்யூனைசேசன் 2022 பை அட்வைசரி கமிட்டி ஆன் வேக்ஸின்ஸ் அண்ட் இம்யூனைசேஷன் பிராக்டிசஸ் (ACVIP)

(பக்கங்கள் 285 – 320) இந்தியாவில் பழைய தடுப்பூசிகளுக்கு பதிலாக நீடித்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குழந்தைகளுக்கு உகந்த தன்மையுடனான புதிய டைபாய்டு கான்ஜுகேட் தடுப்பூசிகளுக்கு மாறுவதை வலியுறுத்தும், டைபாய்டு தடுப்பூசிகள் பற்றிய விரிவான மதிப்பாய்வு.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப்மேடிசின்

ஃபேஸ் 3 எஃப்பிகசி அனாலிசிஸ் ஆஃப் ஏ டைபாய்டு காஞ்சுகேட் வேக்ஸின் டிரையல் இன் நேபாள்

நேபாளத்தில் நடத்தப்பட்ட சமவாய்ப்புடன் கூடிய ஒரு ஆய்வில் டைபாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட குழந்தைகளின் (9 மாதங்கள் முதல் 16 வயது வரை) இரத்த கல்ச்சர் மீதான செயல்பாட்டுத் திறன் ~82% இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தது மற்றும் இளம் வயது குழந்தைகள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்கியது.

தி லான்செட்

ப்ரோடெக்ஷன் பை வேக்சினேஷன் ஆஃப் சில்ரன் எகைன்ஸ்ட் டைபாய்டு பீவர் வித் அ Vi-டெட்டனஸ் டாக்ஸாய்டு கான்ஜுகேட் வேக்ஸின் இன் அர்பன் பங்களாதேஷ்: ஏ க்ளஸ்டர் ராண்டமைஸ்ட் டிரையல்

வங்காளதேசத்தில் >61,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் (9 மாதங்கள்–<16 வயது) சம்பந்தப்பட்ட ஒரு ஆய்வு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் டைபாய்டுக்கு எதிராக ~85% பாதுகாப்பு இருப்பதை வெளிப்படுத்தியது . இந்த தடுப்பூசி அனைத்து வயதினருக்கும் மிகவும் செயல்திறன் மிக்க வகையில் இருந்தது, இதில் ~81% 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடங்கும். கடுமையான பாதிப்பு நிகழ்வுகள் எதுவும் காணப்படவில்லை.

தி லான்செட்

5 இயர் வேக்ஸின் ப்ரோடெக்ஷன் ஃபால்லோயிங் ஏ சிங்கிள் டோஸ் ஆஃப் Vi-டெட்டனஸ் டாக்ஸாய்டு கான்ஜுகேட் வேக்ஸின் இன் பங்களாதேஷ்
சில்ரன் (TryVOID): ஏ க்ளஸ்டர் ராண்டமைஸ்ட் டிரையல்

பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஐந்து ஆண்டுகால தொடர் கண்காணிப்பு ஆய்வு , டைப்பார் TCV இன் செயல்திறன் 3–5 ஆண்டுகளில் ~50% ஆகக் குறைந்துள்ளதை வெளிப்படுத்தியது , இது பள்ளி நுழைவு வயதில் ஒரு பூஸ்டர் டோஸ் தேவைப்படும் சாத்தியக் கூறு இருப்பதை சுட்டிக்காட்டியது.

தி லான்செட்

எஃப்பிகசி ஆஃப் டைபாய்டு கான்ஜுகேட் வேக்ஸின் : மலாவியன் குழந்தைகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு 4 ஆண்டு, 3ஆம் கட்ட, சம வாய்ப்புடன் கூடிய போலி மருந்துக் கட்டுப்பாட்டு சோதனையின் இறுதி பகுப்பாய்வு

மலாவியில் (~28,000 குழந்தைகள், 9 மாதங்கள்–12 வயது) நடத்தப்பட்ட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட போலி மருந்து ஆய்வு டைப்பார் TCV நான்கு ஆண்டு கால அளவில் அனைத்து வயதினருக்கும் வலுவான பாதுகாப்பை அளித்து ~78% செயல்திறனை தக்கவைத்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது , செயல்திறனில் குறைந்தபட்ச அவளிலேயே சரிவைக் கண்டிருந்தது.

இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்

அசித்ரோமைசின் ரெசிஸ்ட்டன்ஸ் மெக்கானிசம் இன் டைபாய்டல் சால்மோனெல்லா இன் இந்தியா : ஏ 25 இயர்ஸ் அனாலிசிஸ்

602 ஆர்க்கைவ்ட் ஐசோலெட்ஸ் ஐ ஆய்வு செய்ததில் இந்தியாவில் டைபாய்டல் சால்மோனெல்லாவுக்கு எதிராக அசித்ரோமைசின் தொடர்ந்து செயல்திறன் மிக்கதாக இருப்பதைக் கண்டறியப்பட்டது ஆனாலும் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவரும் போக்குகள் காணப்பட்டன. எதிர்ப்பு சக்தி பெற்ற மரபணுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை, இது நுண்ணுயிர் எதிர்ப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீன்

பீல்ட் எஃப்பெக்டிவ்நெஸ் ஆஃப் ஏ டைபாய்டு கான்ஜுகேட் வேக்ஸின் : 2018 நவி மும்பை பீடியாட்ரிக் TCV பிரச்சாரம்

ஒரு மேலோட்டப்பார்வை :லார்ஜ் ஸ்கேல் பிரச்சாரம் குறியிலக்கு ~113,000 குழந்தைகள் (9 மாதங்கள்–14 வயது) டைப்பார் TCV இன் ~84% கள செயல்திறன் நிரூபிக்கப்பட்டது.

கிளினிக்கல் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸஸ்

ஸ்பாண்டேனியஸ் எம்ர்ஜென்ஸ் ஆஃப் அசித்ரோமைசின் ரெஸிஸ்டன்ஸ் இன் இண்டிபெண்டண்ட் லீனியேஜஸ் ஆஃப் சால்மோனெல்லா டைஃபி இன் நார்தர்ன் இந்தியா

சண்டிகர் இந்தியாவிலிருந்து 66 சால்மோனெல்லா டைஃபி ஐஸோலேட்ஸ்களை பகுப்பாய்வு செய்த ஒரு ஆய்வில் , அசித்ரோமைசின் எதிர்ப்பாற்றலை வழங்கும் ஒரு குறிப்பிட்ட பிறழ்வின் (acrB மரபணுவில் R717Q) கொண்ட ஏழு வரிசைகளை அடையாளம் காணப்பட்டது.

தி லான்செட் குளோபல் ஹெல்த்

பாகிஸ்தான் ஹைதராபாத் பகுதிகளில் ஒரு விரிவான மருந்து எதிர்ப்புத்திறனுடனான டைபாய்டு பரவல் திடீரென்று விளைந்த சந்தர்ப்பத்தில் எஃப்பெக்டிவ்னஸ் ஆஃப் டைபாய்டு காஞ்சுகேட் வெக்ஸின் எகைன்ஸ்ட் கல்ச்சர் கன்ஃபர்ம்ட் சால்மோனெல்லா என்டெரிகா செரோடைப் டைஃபி- ஏ கோஹார்ட் ஸ்டடி

பாகிஸ்தான் ஹைதராபாத் பகுதிகளில் மருந்து-எதிர்ப்பு திறன் கொண்ட (XDR) டைபாய்டு பரவலின் போது , ​​டைப்பார் TCV, -உறுதிப்படுத்தப்பட்ட டைபாய்டு கல்ச்சருக்கு எதிராக 95% செயல்திறனையும், சுமார் 23,000 குழந்தைகளைக் கொண்ட ஒரு ஒத்த குழுவில் XDR டைபாய்டு ஸ்ட்ரைன்ஸ்க்கு எதிராக 97% செயல்திறனையும் வெளிப்படுத்தியது.

ஹியூமன் வேக்சின்ஸ் & இம்யூனோதெரப்பெட்டிக்ஸ்

டைப்பர் TCV ஐ வழக்கமான குழந்தை பருவ தடுப்பூசிகளுடன் இணைத்து வழங்குதல்

இந்தியாவில் (493 குழந்தைகள்) நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் குழந்தைகளுக்கு 9 மாதங்களில் தட்டம்மை/MMR தடுப்பூசிகளுடன் சேர்த்து டைப்பர் TCV ஐ நோயெதிர்ப்பு எதிவினையின் மீது எந்த ஒரு எதிர்மறையான தாக்கமுமில்லாத வகையில் பாதுகாப்பாகக் கொடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டது.

வேக்ஸின்

இந்தியாவில் டைபாய்டு கன்ஜூகேட் தடுப்பூசி செயல்படுத்தல்: ஆதாரங்களின் மீதான ஒரு பார்வை

இந்தியாவில் நீண்ட கால பாதுகாப்பு தரவுகளிடையேயுள்ள இடைவெளியை எடுத்துக் காட்டும் வகையிலான டைப்பார் TCV இன் விலைப் பயன் திறன், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய விரிவான மதிப்பாய்வு.

வேக்ஸின்

ஜிம்பாப்வேயில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே தொற்றுநோய் பரவலுக்கு எதிர்வினையாற்றப் பயன்படுத்தப்பட்ட டைபாய்டு காஞ்சுகேட் வேக்ஸின் செயல்திறன் : மேட்ச்ட் கேஸ் கண்ட்ரோல் ஸ்டடி

ஜிம்பாப்வேயில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் , திடீர் நோய் பரவல் காலத்தின் போது டைபாய்டு காஞ்சுகேட் வேக்ஸின் செயல்திறனை மதிப்பீடு செய்தது. அதன் முடிவுகள் ஒரு வலுவான பாதுகாப்பு வழங்கப்படுவதை வெளிப்படுத்தின, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் (75–84% செயல்திறன்), டைபாய்டு நோயைக் கட்டுப்படுத்துவதில் TCV இன் பங்கை மேலும் சிறப்பாக எடுத்துக் காட்டியது.

ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன்

அடிக்கடி அறிகுறியற்ற நிகழ்வுகள் மற்றும் தொடக்க் நிலை நோய்க் கிருமியுடனான இரத்த இருப்பை, கட்டுப்பாட்டுடனான ஹியூமன் இன்ஃபெக்ஷன் அடையாளப்படுத்திய பிறகு டைபாய்டு நோயறிதலை உகந்ததாக்குவதற்கான இரத்த வளர் சோதனை (கல்ச்சர்) -PCR

இரத்த வளர் சோதனை (கல்ச்சர்) -PCR வரிசை இரத்தத்தில் ஒரு S டைஃபி DNA இருப்பதை கண்டறிந்து நோயறிதலுக்கான நுண்ணறிவை வழங்குகிறது. அது அறிகுறிகளற்ற தொற்றுக்களை மற்றும் உட்செலுத்திய பிறகு விரைவிலேயே நோய்க் கிருமியுடனான இரத்தத்தை அடையாளம் காண்கிறது ஆனால் மருத்துவ அமைப்பில் அதன் பொருந்தத்தக்க தன்மை வரையறைக்குட்பட்டதாக இருக்கிறது

ஃப்ராண்டியர்ஸ் இன் பாக்டீரியாலஜி

குடல் காய்ச்சல் மற்றும் நோய் கண்டறிதல் கருவிகள்: அதன் துல்லியத்தை வரையறுத்தல்

இந்த ஆய்வு இரத்த உறைவு PCR க்கு எதிராக டைஃபிபாயிண்ட் EIA (ELISA) ஐ மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் , 92.9% உணர்திறன் மற்றும் 68.8% தனித் திறன் தன்மை இருப்பதை கண்டறிந்தது. விரைவு சோதனை துல்லியத்தை மேம்படுத்துவதன் மூலமாக நோய் கண்டறிதலின் நம்பகத்தன்மையை மேம்படுத்தலாம் மற்றும் குறைவான வளஆதாரங்களுடனான அமைப்புகளில் தேவையற்ற நோய் நுண்ணுயிர் எதிர்ப்பான்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

ஃப்ராண்டியர்ஸ் இன் பாக்டீரியாலஜி

குடல் காய்ச்சல் நோய் கண்டறிதல்: தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால போக்குகள்

இரத்த வளர் சோதனை (கல்ச்சர்), PCR மற்றும் சீராலஜி உள்ளிட்ட தற்போதைய நோய் கண்டறியும் நடைமுறைகள் வரையறைகளைக் கொண்டுள்ளன. குடல்நோய் பரவலாக உள்ள உள்ளூர் பகுதிகளில் செலவு குறைந்த, அணுகக்கூடிய நோய் கண்டறிதல் நடைமுறைகளை வலியுறுத்தி மேம்பட்ட நோய் கண்டறிதலுக்கான பயோமார்க்கர்களை அடையாளம் காண்பதில் ஆய்வுகள் கவனம் செலுத்துகின்றன.

பொறுப்புத் துறப்பு: இந்த பக்கத்தில் கண்டுள்ள உள்ளடக்கங்கள் இந்திய ஆரோக்கியப் பராமரிப்பாளர்களுக்கு மட்டுமானது. நோயாளிகள் தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளுக்கு தங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

Scroll to Top
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.