டைபாய்டு நோயை எவ்வாறு தடுப்பது ?
டைபாய்டைத் தவிர்க்க எளிய வழிமுறைகள்.

டைபாய்டு 4Fs-ஈக்கள், விரல்கள், மலம் மற்றும் ஃபோமைட்டுகள் (தொற்றுநோயைக் கொண்டு செல்லக்கூடிய பொருட்கள்) ஆகியவற்றால் பரவுவதாகக் கூறப்படுகிறது.[1] சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத சமூகங்களில் இது விரைவாக பரவுகிறது.[2]
டைபாய்டைத் தடுக்க, நீங்கள் செய்யக்கூடிய மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளன:[3]

கைகளை முறையாகத் தொடர்ந்து கழுவுங்கள்

பாதுகாப்பாக உண்ணுவது பாதுகாப்பாக பானம் பருகும் பழக்கங்களை கடைப்பிடியுங்கள்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்
தொடர்புடைய பக்கங்கள்
WASH நெறிமுறைகள்
சுத்தமான நீர், போதுமான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் இல்லாத சமூகத்தினரிடையே அதிகளவிலான மக்கள் நோய்வாய்ப்பட நேரிடும். WASH நெறிமுறையைப் பின்பற்றுவது (தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்) டைபாய்டு நோயைத் தடுக்க உதவும். மேம்படுத்தப்பட்ட WASH உள்கட்டமைப்பு டைபாய்டு மற்றும் இதர தொற்று நோய்களைக் குறைப்பதற்கான அடித்தளமாக இருக்கும்.[1]

சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாத போது , ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவும்.[3]
உணவு மற்றும் பானங்கள் பாதுகாப்பு

குடிநீர் பாதுகாப்பு[3]
- வடிகட்டிய அல்லது கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்கவும் அல்லது பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தவும் (குடிப்பதற்கு முன் குறைந்தது 1 நிமிடமாவது நீரை கொதிக்க வையுங்கள்)
- ஐஸ்கிரீம்கள், பாப்சிக்கிள்ஸ் அல்லது ஐஸ் (மினரல் அல்லது கொதிக்க வைத்த நீரிலிருந்து தயாரிக்கப்பட்டவைகளைத் தவிர) சந்தேகத்திற்குரிய மூலாதாரங்களிலிருந்து வருபவைகளைத் தவிர்க்கவும்
- சுத்திகரிக்கப்படாத் பால் குடிப்பதைத் தவிர்க்கவும்

உணவு பாதுகாப்பு[3,4]
- நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்ணுங்கள்
- காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே உட்கொள்ளுங்கள்
- புதியதாக சமைக்கப்பட்டு, சூடாக பரிமாறப்பட்டு, சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட இல்லையெனில் சாலையோர உணவுகளை தவிர்க்கவும்
- சுத்திகரிக்கப்படாத பால் பொருட்களைத் தவிர்க்கவும்
- சரியாக சமைக்கப்படாத முட்டைகளைத் தவிர்க்கவும்
தடுப்பூசி
WASH நெறிமுறை நடைமுறைகள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைய பல ஆண்டுகள் ஆகும் என்றாலும், தடுப்பூசி அனைத்து சமூகத்தினரையும் விரைவாகச் ன்றடையக்கூடும் (COVID காலத்தில் அனுபவித்தது போல). டைபாய்டு பாதிப்பு ஆபத்து அதிகம் உள்ள நாடுகள் கொள்ளை நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு சாத்தியக் கூறுள்ள தடுப்பூசியை அடிப்படை தார நடவடிக்கையாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது, இது நோய்த் ஹோற்று திடீரென அதிகளவில் பரவும் வாய்ப்பைக் குறைக்கிறது.[5]
இந்தியாவில், இரண்டு வகையான டைபாய்டு நோய்த் தடுப்பூசிகள் கிடைக்கின்றன:[5]
டைபாய்டு இணை தடுப்பூசி (TCV)
ஒரு கேரியர் புரதத்துடன் இணைக்கப்பட்ட Vi பாலிசாக்கரைடு ஆன்டிஜென் அடங்கிய உட்செலுத்தக் கூடிய ஒரு தடுப்பூசி.
Vi பாலிசாக்கரைடு (Vi-PS) தடுப்பூசி
டைபாய்டு தடுப்பூசிகளிடையேயான ஒப்பீடு[5,6]
அம்சங்கள் | டைஃபாய்ட் காஞ்சுகேட் வேக்ஸின்(TCV)+ | Vi பாலிசாக்கரைட்(Vi-PS) |
---|---|---|
செயல்திறன் | 87.1% வரை | 55-61% வரை |
வயது | 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் | 2 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் |
செலுத்தும் வழிமுறை | ஊசி மூலம் | ஊசி மூலம் |
பாதுகாப்பு | குறைந்த பட்சமாக 7 ஆண்டுகள் | அதிக பட்சமாக 2 இல் இருந்து 3 வருடங்கள் வரை |
டைபாய்டு தடுப்பூசிகள் குறித்த WHO-SAGE பணிக்குழு, 6 முதல் 23 மாதங்கள் வயதுள்ள குழந்தைகளுக்கான வழக்கமான நோய்எதிர்ப்பு திட்டங்களில் TCV பயன்படுத்த பரிந்துரைக்கிறது.[6] தடுப்பூசி செலுத்தப்பட்டதற்குப் பிறகு குறைந்தது 28 நாட்களில் இருந்து பாதுகாப்பை வழங்கத் தொடங்குகிறது.
குறிப்பு: சரியான மருந்தளவிற்காக உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.[7]
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்பதற்கான சிறந்த வழி என்ன?
டைபாய்டு பாதிப்புக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு நடைமுறை WASH + தடுப்பூசி இணைந்த ஒன்றாகும். மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் துப்புரவு நடவடிக்கைகள் ஆபத்தை குறைக்கும் என்றாலும் அதே வேளையில், இந்த நடைமுறைகளுடன் சேர்த்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொற்றுநோய்க்கான வாய்ப்பை பெருமளவில் குறைக்கிறது.
தொடர்புடைய பக்கங்கள்
மூலாதாரங்கள்
- https://www.ncbi.nlm.nih.gov/books/NBK557513/
- https://www.who.int/news-room/fact-sheets/detail/typhoid
- https://www.cdc.gov/typhoid-fever/prevention/index.html
- https://www.dshs.texas.gov/sites/default/files/IDCU/investigation/electronic/EAIDG/2023/Typhoid-Fever-Salmonella-Typhi.pdf
- Purple Book: IAP Guidebook on Immunization 2022 By Advisory Committee on Vaccines and Immunization Practices (ACVIP)
- https://iris.who.int/bitstream/handle/10665/367354/WHO-IVB-2023.01-eng.pdf?sequence=1&isAllowed=y
- https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(24)01494-6/fulltext