Typhoid Needs Attention

டைபாய்டு நோயின் அறிகுறிகள் என்னென்ன?

அவற்றை தொடக்கத்திலேயே அடையாளம் காண்பது சிக்கல்களைத் தடுக்கும்.

டைபாய்டு அல்லது குடல் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் நோய் கிருமிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து 1 முதல் 3 வாரங்களுக்குள் வெளிப்படத் தொடங்கிவிடும் அதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையும்.

டைபாய்டு காய்ச்சல் தோற்றங்கள் மற்றும் அறிகுறிகள்[1]

படிப்படியாக அதிகரிக்கும் காய்ச்சல் ( ஏணிப் படி வடிவமைப்பில்)

தலை வலி
சளி
சோர்வு அல்லது பலவீனம்
பசியின்மை
வயிற்று வலி
தடிப்புகள் அல்லது புள்ளிகள் (குறிப்பாக மார்பு அல்லது வயிற்றுப் பகுதிகளில், சிவந்த சருமத்தில் மிக எடுப்பாக தெரியும் அளவில் இருக்கும்)
இருமல்
அதிக வியர்வை
தசை வலி
குமட்டல் மற்றும் வாந்தி
வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்

எச்சரிக்கையாக இருங்கள்[2]

டைபாய்டு நோய்க் கிருமிகள் எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் உடலில் தங்கியிருக்கும் இது அறிகுறியற்ற தொற்று என்று அழைக்கப்படுகிறது.

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், டைபாய்டு நோயின் சிக்கல்கள் தீவிரமடையலாம் , இது குடல் இரத்தப்போக்கு, துளையிடல் மற்றும் மூளை வீக்கத்திற்கு வழிவகுப்பதோடு குழப்பம் அல்லது மனநோயை விளைவிக்கும்.

அறிகுறிகள் மறைந்த பிறகும் கூட ஒரு சில நோயாளிகள் நோய்க் கிருமிகளை உடலில் தக்கவைத்துக் கொண்டு தங்களை அறியாமலேயே மலம் வழியாக மற்றவர்களுக்கு நோயைப் பரவச்செய்யலாம்.

மூலாதாரங்கள்

பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.

Scroll to Top
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.