டைபாய்டு நோய்க்கு நீங்கள் எவ்வாறு சிகிச்சை அளிப்பீர்கள்?
உரிய காலத்தில் சிகிச்சை அளிப்பது எளிதாகவும் முழுமையாகவும் குணமடைந்து மீண்டெழுவதற்கு இட்டுச்செல்லும்.

டைபாய்டு காய்ச்சலுக்கு குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் பயன்தரத்தக்க வகையில் சிகிச்சை அளிக்க முடியும். உங்களுக்கு டைபாய்டு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட உடனே தாமதமின்றி சிகிச்சையைத் தொடங்குவது அவசியம் ஏனென்றால் சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் எந்த ஒரு தாமதமும் சிக்கல்களை[1] உருவாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் மக்கள் வழக்கமாக 6-7 நாட்களுக்குள் மீண்டெழுந்துவிடுவார்கள் ஆனால் சிகிச்சையை தாமதப்படுத்தினால் நோய் குணமாவதற்கு பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை ஆகலாம். டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்ட சிலர் குணமானதற்குப் பிறகும் நோய்க் கிருமிகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள் அவர்கள் காலப்போக்கில் தீராத நீடித்த சால்மோனல்லா டைஃபி கிருமி சுமப்பவர்களாக மாறிவிடுவார்கள்.[2]
குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும் கட்டுப்பாடின்றி அதை பயன்படுத்துவது மற்றும் இணக்கமாக இல்லாதிருப்பது போன்ற காரணங்களால் பல்வேறு வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு சக்தி (AMR) அதிகரித்துவருகிறது அதன் விளைவாக மேலும் சிக்கலான அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதால் மருத்துவப் பராமரிப்பிற்கான செலவுகள் கூடுதல் நிதிச் சுமையை ஏற்ப்படுத்துகின்றன.[3]
தொடர்புடைய பக்கங்கள்
ஆன்டிபயாடிக்ஸ்
ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் டைபாய்டு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் டைபாய்டு மருந்துகளின் ஒரு அத்தியாயவசியமான அங்கமாகும். சிகிச்சையை மிகப் பாதுகாப்பாகவும் மற்றும் செயல்திறன் மிக்க வகையிலும் மேற்கொள்ள மிகத் துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவரின் பரிந்துரைகளுக்கு இணங்க செயல்பட வேண்டியது மிக அத்தியாவசியமானவை.
உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் முழு அளவுகளையும் உரிய கால அளவில் எடுத்து முடிப்பது மிகவும் அவசியம். குறிப்பிட்ட தேவைப்படும் மருந்தளவை எடுத்துக் கொள்ளத் தவருவது சிகிச்சையில் எதிர்பார்த்த பொந்துமான விளைவுகள் ஏற்படாமல் போகும் மற்றும் கூடுதல் சிக்கல்களை உருவாக்கும்.[3]
முறையான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இல்லாமல் இருந்தால் இந்த காய்ச்சல் 3 இல் இருந்து 4 வாரங்களுக்கு தொடரும். சிகிச்சை மேற்கொண்டால் வழக்கமாக இதன் அறிகுறிகள் 6 இல் இருந்து 7.[4] நாட்களுக்குள் முன்னேற்றம் காணும் இருப்பினும். அறிகுறிகள் மட்டுப்பட்ட பிறகும் தொடர்ந்து சில நாட்களுக்கு களைப்பும் வலுவின்மையும் தொடரும்.

நுண்ணுயிர் எதிர்ப்பு

நுண்ணுயிர் எதிர்ப்பு உலகளவில் ஒரு கடுமையான ஆரோக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்பவை நோய்த் தொற்றுக்களுக்கு எதிராக சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள். இத்தகைய நோய்த் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு இதுவரை மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த மருந்துகள் செயல்திறனை இழந்துவிடுவதால் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) ஏற்படுகிறது அதன் காரணமாக நோய் பரவும் ஆபத்து அதிகரித்து தீவிர உடல் நலக் குறைவை ஏற்படுத்தும் அல்லது மரணத்தையும் விளைவிக்கக் கூடும். நவீன மருந்துகளின் பலன்களை தடுத்து ஆபத்தை விளைவிக்கிறது.[5]
துரதிர்ஷ்டவசமாக, மற்ற இதர நோய்க் கிருமிகளைப் போலவே சால்மோனல்லா டைஃபி கிருமியும் அதிகளவில் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை பெற்றுவருகின்றன. உலகளவில் 1 ஆவது மற்றும் 2 ஆவது படிநிலை ஆன்டிபயாடிக்ஸ்[6] களுக்கு விரிவான அளவில் மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட புதிய வகை சால்மோனல்லா டைஃபி கிருமியின் தோற்றம் மற்றும் பரவல் காரணமாக இந்தப் பிரச்சினை மேலும் மோசமடைந்து வருகிறது.[6]
நுண்ணுயிர் எதிர்ப்புக்கு ஒரு முக்கிய காரணம், மனிதர்கள், விலங்குகள் மற்றும் விவசாயத்தில் இந்த மருந்துகளின் தவறான பயன்பாடு, அதிகப்படியான பயன்பாடு, குறைவான அளவு, முழுமையற்ற கால அளவு, சரியான மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து வாங்குதல் மற்றும் இதுபோன்ற பிற தவறான பயன்பாடுகள் ஆகும். இந்த ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளின் உலகளவிலான பயன்பாடு 2000 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கிடையே கிட்டத்தட்ட 65% அதிகரித்துள்ளது குறிப்பாக இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இது அதிகளவில் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒரு முறையாயன நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் 2030 ஆம் ஆண்டுக்குள் இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு (2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[7]
AMR இன் விளைவுகள்
நுண்ணுயிர் எதிர்ப்பு சால்மோனெல்லா டைஃபியின் எழுச்சியுடன், பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற மருந்துகள் மூலம் சிகிச்சை பயனற்றதாகிவிடும். இத்தகைய எதிர்ப்பு விகாரங்களின் தோற்றம் டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகளை நிர்வகிப்பதை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது, இது சிகிச்சையை மிகவும் சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் ஆக்குகிறது.[7] புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வரும் நிலையில், பாக்டீரியா எதிர்ப்பு வேகமாக உருவாகிறது.[1]

இருப்பினும் இத்தகைய புதிய மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட விகாரங்கள் வளர்ச்சியடைவதை தடுப்பூசிகள் கட்டுப்படுத்தி தடை செய்கின்ற.[6]
ஆன்டிபயாடிக் மருது எதிர்ப்புத் திறனை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் ஒரு வலிமையான ஆயுதமாக செயல்படுகின்றன. தடுப்பூசிகள் உங்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் முன்னரே உங்கள் உடல் நோய் எதிர்ப்புத் திறன் அமைப்பை அத்தகைய நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட பயிற்சி அளித்து உதவுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் மத்தியில் நோய்த் தொற்று குறைவாகவே ஏற்ப்படுகிறது, அதன் காரணமாக ஒரு சில நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே பரிந்துரைக்கப்படும் அவசியம் இருக்கிறது ஆகவே அவர்கள் மிகச்சிறந்த பாதுகாப்பை பெறுகிறார்கள்.[7]
வீட்டுப் பராமரிப்பு
பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவுகள் அத்துடன் உங்கள் மருத்துவர் அளிக்கும் சிகிச்சையோடு சேர்த்து வீட்டில் நீங்கள் பின்பற்றவேண்டிய ஒரு சில நடமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[3,8]

உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த கால அளவுக்கு தொடர்ந்து அந்த மருந்துகளை நீங்கள் எடுக்கவேண்டும்.

பிறகு, சமைக்கும் போது அல்லது உணவு பரிமாறும் போது, மற்றும் உணவு அருந்துவதற்கு முன்பாக உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீரைக் கொண்டு முழுமையாக கழுவுங்கள்.

அதிகளவில் வீட்டில் இருக்கக் கூடிய திரவ ஆகாரங்களை உண்டு நீச்சத்து எப்போதும் குறையாமல் பராமரியுங்கள்.
இந்த படிநிலைகளை பின்பற்றுவது நோய்த் தொற்று பரவும் ஆபத்தை பெருமளவில் குறைக்கும்.
மருத்துவமனை அனுமதி
நல்ல சுகாதாரம் மற்றும் துப்புரவு நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் குறைந்த அளவே பாதிப்புடைய டைபாய்டு காய்ச்சலை கட்டுப்படுத்தி விரைவாக குணமடைந்து விடலாம். இருப்பினும் காய்ச்சல் இடைவிடாது தொடர்ந்து நீடித்து நோயாளி மிகவும் மோசமான உடல் நலக் குறைவாக அல்லது நீர்ச்சத்து குறைந்தவராகக் காணப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பரிந்துரைக்கப்படுகிறது.
தொடர்புடைய பக்கங்கள்
மூலாதாரங்கள்
- https://www.ncbi.nlm.nih.gov/books/NBK557513/
- https://oklahoma.gov/health/health-education/acute-disease-service/disease-information/typhoid-fever.html
- https://www.who.int/news-room/fact-sheets/detail/typhoid
- https://www.health.nsw.gov.au/Infectious/controlguideline/Pages/typhoid.aspx
- https://www.who.int/news-room/fact-sheets/detail/antimicrobial-resistance
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10236512/
- https://www.who.int/publications/i/item/9789240098787
- https://www.healthdirect.gov.au/typhoid-and-paratyphoid
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.