டைபாய்டு என்றால் என்ன?
அதைத் தடுப்பதற்கான முதல் படி அது குறித்து புரிந்து கொள்வதுதான்.
சால்மோனல்லா டைஃபி என்ற ஒரு கிருமியால் ஏற்படும் ஒரு தீவிர நோய்த் தொற்று டைபாய்டு.[1] இது மாசு பட்ட உணவு மற்றும் நீரால் பரவக்கூடிய ஒரு வகையான குடல் நோய்[2] இந்த நோய் நுண்ணுயிரி மனித உடலில் வாழும் மற்றும் எந்த ஒரு அறிகுறியுமில்லாமல் நமது உடல் அவற்றை நீண்ட காலத்துக்கு தக்கவைத்துக் கொண்டிருக்கும் (ஒரு சில சந்தர்ப்பங்களில் பல வருட காலத்திற்கு) தெரியாமல் மற்றவர்களுக்கும் பரவச்செய்யும். மாசுபட்ட உணவு அல்லது நீர் உள் செலுத்தப்பட்டால் அந்த நோய் நுண்ணுயிரிகள் குடல் பகுதியை ஆக்கிரமித்து அதைத் தொடர்ந்து இரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் இதர பகுதிகளுக்கு பரவத் தொடங்கும்[3] ஒரு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் டைபாய்டு பாதிப்பு தீவிர சிக்கல்களை ஏற்ப்படுத்தி மரண ஆபத்தையும் விளைவிக்கக்கூடும். பெரும்பாலும் 5 வதிலிருந்து 15 வயது வரையிலான குழந்தைகள் இந்த நோயால் பொருத்தமற்ற வகைகளில் பாதிப்படைக்கிறார்கள்.[4]
தொடர்புடைய பக்கங்கள்
இது எவ்வாறு பரவுகிறது?
ஷெட்டிங்
டைபாய்டு நோய் ‘ஷெட்டிங்’ (“வெளியேற்றம்”) என்று அழைக்கப்படும் முறையால் பரவுகிறது இதில் நோய்க்கிருமிகள் பாதிக்கப்பட்ட நபர் மலஜலம் கழிக்கும் போது அவரது உடலில் இருந்து அவரது மலத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. சல்மோனல்லா டைஃபி நோய்க் கிருமிகளை வெளியேற்றிய அந்த நபரால் கையாளப்படும் எந்த ஒரு உணவுப் பொருள் அல்லது பானங்களையும் நீங்கள் உட்கொள்ள நேர்ந்தால் உங்களுக்கு டைபாய்டு நோய் தொற்று ஏற்படும்.[5]
உட்செலுத்துதல்
நோய்க்கிருமி உட்செலுத்தப்பட்டவுடன் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள. இது வழக்கமாக, கழிவு நீரால் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது பானங்கள், அத்தகைய மாசுபட்ட நீரால் அலசப்பட்ட தட்டுக்களை பயன்படுத்தி உணவை உண்ணுதல் அல்லது கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழ்வுவாமல் இருக்கு ஒரு நப்ரால் கையாளப்பட்ட உணவை உண்ணுவது போன்றவ்ற்றின் வழியாக நிகழ்கின்றன.[6]

மாசுபட்ட உணவு & நீர்
மேலும் இது பழங்கள் மற்றும் சாலட்டுகள் போன்ற முறையாக கழுவப்படாத அல்லது சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் மூலமாக பாதுகாப்பற்ற ஐஸ் கட்டி அல்லது பாதுகாப்பற்ற பழ சாறுகள் வடிவத்திலான மாசு பட்ட பானங்களை அருந்துவதன் மூலமாகவும் பரவும்.[7]

நீண்ட கால நோய்க் கிருமி கேரியர்கள்
டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நோய் நுண்கிருமிகளை தங்கள் குடல் பாதையில் நீண்டநாட்களாக தக்கவைத்துக் கொண்டிருப்பார்கள் அது அவ்வப்போது அவர்கள் மலஜலத்தின் மூலமாக வெளிப்படுத்தப்படும் . ஒரு சில நோயாளிகளிடையே, அவர்கள் டைபாய்டு நோய் பாதிப்பிலிருந்து மீண்டெழுந்த பிறகும் நோய் கிருமிகளை நீண்ட நாட்களுக்கு தங்கள் குடல் பகுதியில் தக்கவைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு டைபாய்டு நோய் பதிப்பின் எந்த ஒரு அறிகுறியும் இல்லாத நிலையிலும் நோய் கிருமிகளை அவர்கள் தொடர்ந்து பரவச் செய்வார்கள்.[1]
ஆபத்து காரணங்கள் எவை?
உலகளவில் டைபாய்டு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டோர் இந்தியாவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகளில், சமுதாய மற்றும் மருத்துவமனை தரவுகள் இரண்டையும் இணைத்து அத்துடன் பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட நிகழ்வுகளையும் கணக்கில் கொல்லப்பட்டு கணிக்கப்பட்டிருக்கிறது.[8,9]

தொடக்க நிலையில் நோயாளிகள் வழக்கமாக தலைவலி , குமட்டல் மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவற்றோடு காய்ச்சல் இருப்பதை உணர்வார்கள். இருப்பினும் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது தீவிர சிக்கல்களுக்கு இட்டுச்சென்றுவிடும்.[1]

டைபாய்டு காய்ச்சல் சிறுகுடலில் புண்களை ஏற்ப்படுத்தக்கூடும் இதன் விளைவாக குடல் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது ஒரு சில தீவிர நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட சிறு குடல் சுவர் பகுதியிலிருந்து நோய்க் கிருமிகள் வெளியேறி இரத்த ஓட்டத்தில் கலந்து நச்சுபடச் செய்து சீழ் பிடிக்க வைக்கும். மேலும் இதர பல நிகழ்வுகளில் இதயம் , கணையம் அல்லது மூளை போன்ற உறுப்புக்களின் சுவர்களை வீக்கமடையச் செய்யும் மற்றும் சிறுநீரங்களையும் பாதிக்கும்.[7]

டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் மூளை வீக்கம் (என்செஃபலோபதி) , குழப்பம், தூக்கப் பிரச்சினைகள், மன நோய், மனத் தடுமாற்றம் மற்றும் தசை இறுக்கம் போன்ற நரம்புப் பிரச்சினைகளை அனுபவிக்கக் கூடும்.[10]

மேலும் இது கல்லீரல் மற்றும் மண்ணீரல் இரண்டும் சேர்ந்து வீக்கமடையும் ஒரு நிலையான கல்லீரல் –மண்ணீரல் வீக்கநோயை (ஹெபட்டோ–ஸ்ப்லீனோ) உருவாக்கும்.9 நீண்ட காலத்துக்கு நோய்க் கிருமிகளை சுமந்து கொண்டிருக்கும் ஒரு நோயாளிக்கு பித்த நீர்ப்பை புற்றுநோய் பாதிப்பு ஆபத்து அதிகரிக்கும்.[11]
தொடர்புடைய பக்கங்கள்
மூலாதாரங்கள்
- https://www.who.int/news-room/fact-sheets/detail/typhoid
- https://iapindia.org/pdf/Ch-008-Enteric-Fever.pdf
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9304857/
- https://www.nicd.ac.za/wp-content/uploads/2022/06/Enteric-Fever_NICD-recommendations_June-2022_final.pdf
- https://acvip.org/parents/columns/typhoid.php
- https://www.cdc.gov/typhoid-fever/about/index.html
- https://www.mayoclinic.org/diseases-conditions/typhoid-fever/symptoms-causes/syc-20378661
- https://www.nejm.org/doi/pdf/10.1056/NEJMoa2209449
- https://pubmed.ncbi.nlm.nih.gov/35238365/
- https://www.ncbi.nlm.nih.gov/books/NBK557513/
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8190372/
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.