Typhoid Needs Attention

டைபாய்டு ஒரு சாதாரண காய்ச்சல் என்பதையும் விட சற்று தீவிரமானது

அதனால் விளையக் கூடிய விளைவுகள் மதிப்புக்குரியவை அல்ல. ஆபத்தை புரிந்து கொள்ளுங்கள், அது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள் மற்றும் உரிய நேரத்தில் முறையான நடவடிக்கையை மேற்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான டைபாய்டு நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். * [1,2] இருப்பினும், அதைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?

தடுப்பு நடவடிக்கைக்கு முனைப்புடன் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால், நீங்களும் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து இருக்கிறது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 4.5 மில்லியன் பேர் டைபாய்டு நோயால் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது[3]

டைபாய்டு அறிகுறிகள் பொதுவாக ஒரு நபர் பாதிக்கப்பட்ட 1 அல்லது 2 வாரங்களுக்குப் பிறகு உருவாகின்றன[4]

டைபாய்டு நோய்க்கு முறையாக சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால் 30% பேர் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்[5]

* 2017 மற்றும் 2020 க்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, உலகளாவிய டைபாய்டு சுமையில் பாதிக்கும் மேற்பட்டதை இந்தியா சுமக்கிறது. தற்போதைய தரவு மாறுபடலாம்.

ஆதாரங்கள்: John et al., NEJM 2023; Cao et al., JID 2021.

டைபாய்டு நோய் ஏன் ஒரு தீவிர ஆரோக்கியப் பிரச்சினையாக கருதப்படுகிறது?

நுண்ணுயிர் எதிர்ப்பு

மிக அதிகமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான நோய் நுண்ணுயிரிகளின் ஏற்புத் திறன் (AMR) அதிகரித்துள்ளது. இதனால் மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட டைபாய்டு நோய்க் கிருமிகள் உருவாகி இருக்கின்றன. இதன் விளைவாக, டைபாய்டு நோய்க்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமானதாக மாறியுள்ளது.[6]

ஊடுருவி பரவும் தொற்று

டைபாய்டு நோய் குடல் பகுதியிலிருந்து இரத்த ஓட்டத்தின் வழியாக பல உடல் உறுப்புக்களுக்குப் பரவி கடும் பாதிப்பை விளைவிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான அறிகுறிகளையும் சிக்கல்களை தோற்றுவித்து, தாங்க முடியாத வேதனையையும், பரவலான சேதத்தையும், ஏற்படுத்துவதோடு சில சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும்.[7]

தொற்று நோய்

மாசுபட்ட உணவு மற்றும் நீர் மூலம் பரவும் டைபாய்டு, திடீரென்று தொற்றுநோய்ப் பரவலை அதிகரிக்கச் செய்கிறது, குறிப்பாக பாதுகாப்பற்ற நீர் அல்லது உணவு, மோசமான தனிநபர் சுகாதாரம் மற்றும் மோசமான துப்புரவற்ற நிலையில் உள்ள பகுதிகளில், இது குறிப்பிடத்தக்க அளவில் பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கிறது.[8]

நோய் கடத்துபவர் நிலை

குணமடைந்த பிறகும் கூட, தனிநபர்கள் தாங்கள் அறியாமலேயே குடலில் டைபாய்டு பாக்டீரியாவைக் தக்கவைத்துக் கொண்டிருக்கலாம், பின்னர் அவை பரவக் கூடும் அதன் விளைவாக, தொடர்ந்து புதிய தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்ப்படுகிறது செயல்திறன் மிக்க வகையில், நோயை கட்டுப்படுத்தப்படுவதற்கு இது ஒரு தடையாக இருக்கும்.[8]

டைபாய்டு நோயை தடுப்பது மிக எளிது!

டைபாய்டு நோய்க்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள ஒரு சில எளிய படிநிலைகள் இங்கே

தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்

WASH செய்நுட்பம் (நீர்)

சுத்தமான குடிநீரைப் பருகுங்கள்

WASH செய்நுட்பம் (சுத்திகரிப்பு)

பாதுகாப்பான சுகாதாரத்தை கடைபிடியுங்கள்

WASH செய்நுட்பம் (கைசுகாதாரம்)

கைகளை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு டைபாய்டு பாதிக்காமல் பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து அறிய விரும்புகிறீர்களா?

டைபாய்டு நோய் பாதிப்பு உங்களுக்கு இருக்கிறதா?

டைபாய்டு அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒன்று நம்மை ஒன்றும் செய்யாது என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம் ஆனால் அதனால் விளையக்கூடிய தீவிர அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல உங்கள் ஆபத்து அளவை மதிப்பீடு செய்ய இந்த புதிர் வினாக்களுக்கு விடையளியுங்கள்.

டைபாய்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

தவறான தகவல்கள் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள், ஆபத்து குறித்து புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்கான சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

டைபாய்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

தவறான தகவல்கள் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள், ஆபத்து குறித்து புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்கான சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

Frame 2055245448 (1)
டைபாய்டைத் தடுக்க தடுப்பூசிகள் எவ்வாறு உதவுகின்றன?
மேலும் படிக்க
Rectangle 61 (1)
சாலை ஒர உணவுகளிலிருந்து உங்களுக்கு டைபாய்டு வருமா?
மேலும் படிக்க
Frame 2055245448 (5)
டைபாய்டு எவ்வாறு பரவுகிறது மற்றும் அது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?
மேலும் படிக்க

ஒரு ஆழமான பார்வை:
சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கான டைபாய்டு நோய் குறித்த ஒரு நுண்ணறிவுப் பார்வை

சமீபத்திய ஆய்வுகள், கொள்ளை நோய்ப் பரவல் தரவுகள், மருத்துவ வழிகாட்டுதல்கள், நோய்கண்டறிதலை மேம்படுத்த ஆதார அடிப்படையிலான யுக்திகள், டைபாய்டு நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அறிந்து வைத்திருங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டைபாய்டு என்பது என்ன?

டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைஃபி (Salmonella typhi) என்ற ஒரு வகை நுண்கிருமிகள் ஏற்ப்படுகிறது மற்றும் அது மாசுபட்ட உணவு மற்றும் நீரின் மூலம் பரவுகிறது. நோய்த் தோற்றுள்ள நோயாளிகள் தலைவலி , வயிற்றுவலி மற்றும் வலிமைக் குறைவு போன்றவற்றுடன் சேர்த்து உடல் உஷ்ணம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்.[6]

டைபாய்டு இன் மிகவும் பொதுவான அறிகுறிகளில், இடைவிடாத காய்ச்சலுடன் சேர்ந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உடல் வெப்பம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கும் மற்றும் தலைவலி, மிக அதிகமான களைப்பு, வயிற்று வலி மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் காணப்படும்.[9]

சிகிச்சை அளிக்கப்படாமலிருந்தால் அது குடலில் இரத்தக் கசிவு அல்லது ஓட்டை உட்பட பல தீவிரமான உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்ப்படுத்தக் கூடும். ஒரு சில தீவிரமான பாதிப்புக்களில் அது மூளை உட்பட இதர உடல் உறுப்புக்களையும் பாதிக்கக் கூடும்.[10,7]

இல்லை, நோய்த் தொற்றுள்ள நபருடன் நேரடியான அல்லது சாதாரணமான தொடர்பு நடவடிக்கைகள் மூலம் டைபாய்டு காய்ச்சல் பரவுவதில்லை. ஆனால் அவர்கள் தொடும் எந்த ஒரு பொருட்களை குறிப்பாக அவர்கள் தங்கள் கைகளை முறையாக கழுவாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில், அந்தப் பொருட்களை நீங்கள் தொடர்பு கொள்ள நேர்ந்தால் உங்களுக்கும் டைபாய்டு நோய் தொற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம்.[11]

டைபாய்டு நோய்க்கான சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ளத்தொடங்கிய பிறகு ஒரு சில நாட்களிலேயே நீங்கள் சிறப்பாக இருப்பதாக உணரத் தொடங்குவீர்கள். நோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றதை நீங்கள் உணர 10 நாட்கள் வரை ஆகும், ஆனால் நோய் காரணமான கலைப்பு மற்றும் வலுவின்மையிலிருந்து மீண்டுவர மேலும் சிறிது காலம் பிடிக்கும். இருப்பினும் உங்களுக்கு வேறு ஏதாவது சிக்கல்கள் இருந்தாலோ அல்லது நோய்த் தொற்று மீண்டும் ஏற்ப்பட்டாலோ குணமடைய அதிக காலம் பிடிக்கும்.[10]

டைபாய்டு காய்ச்சலுக்கு இரண்டு வகையான தடுப்பூசிகள் இருக்கின்றன :

  • டைபாய்டு காஞ்சுகேட் வேக்ஸின்(TCV)
  • Vi பாலிசாக்கரைடு(Vi-PS)[11]

மூலாதாரங்கள்

பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.

Scroll to Top
This site is registered on wpml.org as a development site. Switch to a production site key to remove this banner.